இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறை இணைந்து நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.
இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. டிரெய்லர் சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது, இது யூடியூப்பில் சாதனை படைத்தது.
ஓசியில் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி !
டிரெய்லர் 24 மணி நேரத்தில் 12.83 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது, இது இன்றுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் இல்லாத மூன்றாவது அதிக எண்ணிக்கையாகும். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இசை கேங்ஸ்டர் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இஷிரா கே கணேஷ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.