யூடியூபின் பிரபல காதலர்களான பப்லு மற்றும் சீத்தல் பிரிவிற்கு இதுதான் காரணமா உண்மையை உடைத்த பப்லு!

நடிகர் பப்லு பிருதிவிராஜ் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அன்று முதல் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் அதைத் தொடர்ந்து பல சின்னத்திரை சீரியலிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் சீத்தல் எனும் பெண்ணை காதலித்து வருவதாகவும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக பேட்டி அளித்து வந்தனர்.

நடிகர் பப்லு அவர் காதல் துணைவியான சீத்தலை கப் கேக் என்று அன்பாக அழைத்து யூடியூபில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள், சமையல் வீடியோக்கள், பிரபல பாட்டிற்கு நடனமாடும் ரீல்ஸ் வீடியோக்கள் என அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களிடையே ஒரு நீங்காத இடத்தை பிடித்திருந்தனர் இந்த ஜோடி. இந்த காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்பொழுது இந்த காதல் பறவைகள் பிரிந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி பரவி வருகிறது. இது குறித்து நடிகர் பப்லுவிடம் பல பேட்டிகள் அடுத்தடுத்து கேட்கப்படும் வருகிறது. அதில் அவர் கூறிய சில சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில நாட்களுக்கு முன்னதாக சீத்தல் பப்லுவை விட்டு பிரிந்ததாக விட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக செய்திகள் பரவத் தொடங்கியது. அதே நேரம் பப்லுவை விட்டு பிரிவதற்கான காரணத்தை ஏதும் வெளிப்படையாக கூறாமல் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் தங்கள் சோசியல் மீடியா பேஜிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் பப்லு தங்கள் பிரிவிற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளார். நான் எந்த தப்பும் பண்ணல இதை இப்போது பொதுவெளியில் சொல்வதன் மூலமாக உங்களிடம் இருந்து எந்த ஒரு சிம்பதியும் எதிர்பார்க்கவில்லை. இதை மக்கள்கிட்ட சொல்வதில் எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை இனி என் வாழ்க்கையில் என்னுடைய தொழில், என்னோட பேஷன் மத்தவங்களை மோட்டிவேட் பண்றது உள்ளிட்ட விஷயங்கள் மட்டும் தான் கவனம் செலுத்த போறேன். இனிமே என்னோட அழுக்கு உள்ளாடையை பொதுவெளியில் நான் கழுவ ஆசைப்படவில்லை என்று துணிவுடன் கூறியுள்ளார்.

மேலும் நான் இப்போது சிங்கிளாவும் இல்ல, நானும் சீத்தலும் பிரிஞ்சிட்டோம் என உங்களுக்கு உறுதியாக தெரியுமா? என்கிட்ட இதை பத்தி கேட்டீங்களா… இன்னும் சீத்தல் கிட்ட இது பத்தி பேசினீங்களா நீங்களா ஒன்னும் எழுதிட்டு இருக்கீங்க அவ்வளவுதான் என கூறினார். அடுத்ததாக போன வருஷம் என்னோட பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடியதில் கிட்டத்தட்ட 11 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளேன். அது என் வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயம் அதனால் இந்த முறை அந்த சிலவை குறைக்க முடிவு எடுத்துள்ளேன். அதேநேரம் என் பிறந்தநாள் அன்று இயக்குனர் மிஷ்கின் என்னை நேரில் அழைத்தார், அவர் இயக்கி வரும் ட்ரெயின் படத்தில் நான் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் இடத்தில் இயக்குனர் மிஷ்கின் முன்னிலையில் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியதாகவும் நடிகர் பப்லு தெரிவித்தார்.

இதை அடுத்து தான் 19 வயதில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண் கேன்சர் நோயால் இறந்து விட்டதாகவும் கூறிய அவர் வாழ்க்கை நாள் மிகவும் பெரிதல்ல சில நொடிகளில் அதில் எந்த மாற்றமும் ஏற்படலாம் என விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தார். அதன் பின் உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களுக்கு துரோகம் செய்து விட்டார்களா என்ற கேள்விக்கு அவர் ஆம் கடவுள் தான் துரோகம் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

1200 கோடி பட்ஜெட்டில்.. அட்லீ இயக்கத்தில் உருவாகும் கமல் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்!

எனக்கு அழகு, அறிவு, கவர்ச்சியான உடலமைப்பு என அனைத்தையும் கொடுத்த ஆண்டவன் என் வாழ்க்கையை டிலில் விட்டு விட்டார். அது எனக்கு மிகவும் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது. கடவுளைத் தவிர வேறு யாரும் என் வாழ்க்கையில் விளையாடவில்லை எனக்கு துரோகம் செய்யவில்லை என பப்லு மிகத் திறமையாக பதில் அளித்தார்.

இதே நேரம் அவருடன் லிவிங்கில் வாழ்ந்த சீத்தல் பற்றி கேள்விகளை எழுப்பும் பொழுது அவர் எந்த பதிலையும் முறையாக கூறவில்லை, அமைதியாக இருந்து பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறி சமாளித்தார். அதே நேரத்தில் சீத்தல் தரப்பிலிருந்து பார்க்கும் பொழுது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார் என்பதை உறுதியான தகவலை அவர் வெளியிட்டு வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...