யூடியூப் பிரபலமான சோட்டு நாய் மரணம்.. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

யூடியூப் சேனல்களில் குழந்தை வளர்ப்பு, சமையல், பேஷன், சினிமா எனப் பலவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மலையாள சேனல் யூடியூப் ஒன்றினை கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியைச் சார்ந்த ஒருவர் நடத்தி வருகிறார்.

அந்த சேனலில் அவர் தன்னுடைய செல்ல நாய் குறித்த வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த நபர் அந்த நாய்க்குட்டியினை 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி வந்து வளர்த்து வருகிறார். செல்ல நாய்க்குட்டிக்கு சோட்டு என்று பெயர் வைத்துள்ளார்.

சோட்டு அவருக்கு பல வகையிலும் வீட்டு வேலைகளில் உதவி புரிந்துள்ள நிலையில் அதுகுறித்த வீடியோவினை யூடியூப் சேனல் ஆரம்பித்து பதிவிட ஆரம்பித்துள்ளார்.

அதன்படி தி சோட்டூஸ் வ்லாக் என்ற பெயரில் யூடியூப் சேனலை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கியுள்ளார்.

இதுவரை 50 வீடியோக்களைப் பதிவிட்ட நிலையில், சோட்டுவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று சோட்டுவை வெகு நேரமாகக் காணாததால் உரிமையாளர் சோட்டுவைத் தேடியுள்ளார்.

இன்று சோட்டு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாகக் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் உரிமையாளர் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலிசீல் புகார் கொடுக்க, போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

சோட்டு சேனல் ரசிகர்கள் சோட்டுவின் இழப்பு குறித்து கடும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment