உண்மையா? பொய்யா? மக்களை குழப்பிய பிரபல யூடியூபர்; பாய்விரித்து பரந்த அலாவுதீன்!

துபாயில் மக்களை கவர்ந்த ஒரு யூடியூபர்-ன் செயல் இணையதளத்தில் வைரலாக பரவுகிறது.  அவர் மேஜிக் கம்பளம் ஒன்றில் ஏறி நின்றவாறு துபாய் நகரத்தையே சுற்றி வந்து பார்வையாளரை வியக்க வைத்துள்ளார். நமக்கு குழந்தை பருவத்தில் மிகவும் பிடித்த கேரக்டரில் ஒன்றுதான் அலாவுதீன்.

அலாவுதீன் மற்றும் மந்திர விளக்கு கதை நம்மை பிரமிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக அலாவுதீனின் மேஜிக் விரிப்பு,மாயாஜாலம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த நிலையில் இதனை போன்று துபாயில் பிரபல யூடியூபர் RhyzOrDie  அந்த மாயாஜால உலகில் ஒரு பகுதியை தற்போது நிஜம் ஆக்கியுள்ளார்.

அதன்படி சொந்தமாக மேஜிக் கம்பளத்தை உருவாக்கி அதன் மீது துபாய் தெருக்களில் அவர் சுற்றி வந்தார். வீடியோவில் தரையிலிருந்து சில அங்குலங்கள் மேலே மிதக்கிறார். கம்பளத்தின் மேல் அவர் பயணம் செய்வதால் மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அலாவுதீன் இளவரசர் அலியை போல் உடையணிந்து இந்த சாகசத்தில் ஈடுபடுகிறார். நீர் நிலையின் மீது அதே கம்பிளியின் மீது நின்று கொண்டு செல்வது அனைவருக்கும் மயிர்க்கூச்செறிய செய்கிறது. RhyzOrDie ஒரு எலக்ட்ரிக் padஐ பயன்படுத்தி இந்த மேஜிக் விளையாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார். இந்த வேலைகளை எல்லாம் செய்தது எப்படி என்பதையும் பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment