தலைகால் புரியாமல் போலீஸ் ஜீப்பில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்! அமைதி காத்தபோலீஸ்!!

இன்றைய தினம் தமிழக முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான மாவட்டத்தில் உள்ளவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்  வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர்

இந்த நிலையில் பல மாவட்டங்களில் இளைஞர்களின் ஆரவாரம் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் போலீஸ் ஜீப்பில் இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவியது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு பாதுகாப்பை அதிகரிக்க சேலம், கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

இங்கு இளைஞர்கள் ஆரவாரத்தோடு உற்சாகமாக ஆடி வந்தனர். அதோடு மட்டுமில்லாமல் தேவர் ஜெயந்தியின் போது காவலர் வாகனம் என்று கூட பார்க்காமல் இளைஞர்கள் அந்த வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். போலீஸ் வாகனம் வந்தபோது வண்டியில் இருந்த காவலர்களை இளைஞர்கள் சிலர் கீழே இறங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாசில்தார் ஒருவரின் வாகனத்திலும் இளைஞர்கள் ஏறி ஆட்டம் போட்டது போலீசாரை ஆத்திரமடையச் செய்தது. இதனால் போலீசார் உயரதிகாரிகளுடன் இந்த தகவலை தெரிவித்தனர்.

ஆனால் உயர் அதிகாரிகளோ விழா நன்றாக முடியவேண்டும், நீங்கள் பொறுமையாக இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கூறி அவர்களை அமைதிப்படுத்தினார். போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியும் தற்போது சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment