Connect with us

இன்ஸ்டா காதலால் விபரீதம்: சிறுமியிடம் 60 பவுன் நகைகள் வாங்கிய இளைஞர் தலைமறைவு!!

insta

தமிழகம்

இன்ஸ்டா காதலால் விபரீதம்: சிறுமியிடம் 60 பவுன் நகைகள் வாங்கிய இளைஞர் தலைமறைவு!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியிடம் 60 சவரன் தங்க நகைகளை மிரட்டி வாங்கிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை பில்லாப்புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் எம்.கே புரத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் தாய் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தப்போது அதில் இருந்த நகைகள் குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது சிறுமியிடம் கேட்டப்போது பயத்தில் அத்தனையும் சொல்லியுள்ளார் சிறுமி. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சதீஷ்குமார் என்பவர் தன்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னதை கேட்டு அப்படியே நகைகளை கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சூழலில் அவர் தலைமறைவாக இருப்பதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top