Connect with us

சமோசாவால் உயிரிழப்பு: விலையேற்றியதால் தீக்குளித்த பரிதாபம்!

News

சமோசாவால் உயிரிழப்பு: விலையேற்றியதால் தீக்குளித்த பரிதாபம்!

887f892d7dc2d01d6f5cf0911a443f3f-1

சமோசா விலை ஏறியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வழக்கமாக சமோசா சாப்பிடும் கடையில் திடீரென சமோசா விலையை 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக ஏற்றிவிட்டார். சமையல் எண்ணெய் விலை மற்றும் மைதா மாவு விலை விலை ஏற்றம் காரணமாக சமோசா விலையை ஏற்றி உள்ளதாக அவர் கூறினார்

இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த இளைஞர் சமோசா கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஐந்து ரூபாய் குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் கடைக்காரர் பிடிவாதமாக விலை குறைக்க முடியாது என்று கூற இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் அந்த கடையின் முன்பாக திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சமோசாவில் விலை ஐந்து ரூபாய் ஏற்றியதற்காக ஆத்திரப்பட்டு உயிரிழந்த அந்த இளைஞரால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top