பல்லடத்தில் சோகம்! லாரி மீது மோதி இளைஞர் பலி.. சிசிடிவி காட்சி வெளியீடு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள பகுதியில் கோவையில் இருந்து நாகராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கொச்சின் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது.

அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் லாரியில் பின்புறத்தின் கீழே விழுந்தார். அப்போது நாகராஜின் தலைமீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே போல் நாகராஜ் பின்னால் வந்த பாலகிருஷ்ணன் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.