அதிவேகமாக வந்த பைக்கினால் இளைஞர் பலி.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நீலக்காட்டு புதூரில் டெம்போ மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் அடுத்துள்ள காங்கேயம் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் பாலகண்ட முரளி. இவரது மகன் அமிர்தவானன் (வயது 19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

மது பிரியர்கள் கவனத்திற்கு! போலீசார் கடும் எச்சரிக்கை..!!

இந்நிலையில் அமிர்தவானன் நேற்று முன்தினம் காங்கேயம் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க வந்த ஆட்டோ மீது இளைஞரின் பைக் மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அமிர்தவானனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் உயிரிழப்பு..!!

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.