காதலி கொடுத்த ஜூஸ்ஸால் இளைஞர் பலி – போலீசார் விசாரணை!!

கேரளா மாநிலம் பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் சாரோன்ராஜ். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கல்லூரி செல்லும் வழியில் சாரோன்ராஜ்க்கு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

16 வயது சிறுமி கர்ப்பம்! 4 பேர் போக்சோவில் கைது!

இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி சாரோன்ராஜ் தனது இளம்பெண் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அதில் ஜூஸ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை குடித்த சிறிது நேரத்தில் சாரோன் ராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சாரோன் உயிரிழந்தார்.

வடகிழக்கு பருவமழை! இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

மேலும், சாரோன் ராஜூக்கு ஆசிட் கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment