Connect with us

ராசிபுரத்தில் பரபரப்பு..!!! ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…!!!

தற்கொலை

தமிழகம்

ராசிபுரத்தில் பரபரப்பு..!!! ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…!!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டின் மோகத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டை தடை விதிக்க வேண்டும் என்றும் உடனடியாக தமிழகத்தில் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டதாரி இளைஞர் சுரேஷ் ஆன்லைன் ரம்பியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆன்லைன் விளையாட்டின் மோகத்தால் சுமார் ரூ. 5 லட்சம் இழந்ததால் சில தினங்களாக மனவேதனையில் இருந்ததாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய தினத்தில் ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சம் பணம் இழந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top