அதிர்ச்சி! 17 வயது சிறுமியை கர்பமாக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). நெல் வியாபாரியான இவர் அதே பகுதியை 17 வயதுடைய மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர் விசாரணை நடத்தியதில், பெற்றோரிடம் சம்பவத்தை சிறுமி அழுதபடி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதே சமயம் மாணவி நேற்று முன் தினம் காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடி தூள்!! பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரூ.1000 – எப்போது தெரியுமா?

இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னை அபிராமி விசாரனை செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்து சுரேஷ் தலைமறைவாகி நேற்று தூத்துக்குடிக்கு சென்று அங்குள்ள தனியார் லாட்ஜில் இரவு அறை எடுத்து தங்கினார். நேற்று மதியம் வரை அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அங்கிருந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்ததில் அவர் சடலமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வருங்கால முதலைமைச்ரே – அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு!

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தூத்துக்குடி போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மூவாநல்லூரில் உள்ள அவரது உறவினருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து சுரேஷ் தூக்குமாட்டி தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment