Connect with us

செல்பி மோகம்! நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் பலி…

உயிரிழப்பு

தமிழகம்

செல்பி மோகம்! நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் பலி…

நம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சி போன்றவைகள் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் நீர்வீழ்ச்சிகளில் செல்பி எடுக்கும் மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு அஜய் பாண்டியன் என்பவர் நண்பர்களுடம் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது செல்பி எடுக்க முயன்றபோது ஆழமான பள்ளத்தாக்கிற்குள் அஜய் பாண்டியனின் கால் தவறி வழுக்கி விழுந்துள்ளார். இதனிடையே உடனடியாக அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர், அஜய் பாண்டியனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், செல்பி மோகத்தால் இளைஞர் நீர்வீழ்ச்சிகளில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top