Connect with us

இளைஞர்கள் மத்தியிலும் தடுப்பூசி பயமா? தடுப்பூசி போடாததால் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு!

தடுப்பூசி

செய்திகள்

இளைஞர்கள் மத்தியிலும் தடுப்பூசி பயமா? தடுப்பூசி போடாததால் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு!

இளைஞர்கள் மத்தியிலும் தடுப்பூசி பயமா? தடுப்பூசி போடாததால் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு!

இந்தியா 150 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு சாதனை புரிந்து கொண்டு வருகிறது. என்னதான் கொரோனா  தடுப்பூசியினை இந்திய அதிகமாக செலுத்தி இருந்தாலும் இன்றளவும் கிராமங்களில் வாழும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி மீது பெரும் அச்சமே உள்ளது.

கிராம மட்டுமில்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக காண முடிகிறது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 25 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல் டோஸ் தடுப்பூசி  போட்டிருந்தால் சிகிச்சையால் இளைஞருக்கு பயன் கிடைத்திருக்கும் என்று மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட முகமது கரிமுல்லா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். எவ்வித இணை நோயும் இல்லாத நிலையிலும் கொரோனா முற்றி நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் முகமது கரிமுல்லா உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top