அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திமிரி பாய்ந்த காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு!

தமிழர்களுக்கு அனைத்தும் வீரமே முக்கியமாக காணப்படும். அதன்படி தமிழர்கள் பொழுதுபோக்காக விளையாடும் விளையாட்டும் வீர விளையாட்டாக காணப்படுகிறது. அதன் வரிசையில் தமிழர்கள் விரும்பி விளையாடும் வீர விளையாட்டு போட்டி  ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தேதி மாற்றம் செய்யப்பட்ட நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி என்றால் காணும்பொங்கல் அன்று தான் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் மதுரையில் உள்ள பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவரும் கூறுவது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தான். இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்றைய தினம் நடந்து கொண்டு வருகிறது.

இதில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டு திமிரி பாய்ந்து வருகிறது. காளையை அடக்குவதற்கு திமில் பிடிக்கும் முயற்சியில் காளையர்கள் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒரு உயிர்பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை முட்டியதில் 18 வயது நிரம்பிய இளைஞர் உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞர் பாலமுருகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார், ஆயினும் பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment