Connect with us

கடிதம் எழுதிவைத்து விட்டு இளைஞர் தற்கொலை!! – ஈஷாயோகா மையத்தில் பரபரப்பு;;

death 1 1

தமிழகம்

கடிதம் எழுதிவைத்து விட்டு இளைஞர் தற்கொலை!! – ஈஷாயோகா மையத்தில் பரபரப்பு;;

கோவை ஈஷா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா கொல்லு என்ற 32 வயதுடைய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

இவருடைய தற்கொலை தொடர்பாக ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் அவருடைய உடலை அப்பகுதியில் இருக்கும் மருத்துவ மனைக்கு கொண்டுவந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அவர் தங்கியிருந்த அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் எடுத்துள்ளதாக கூறினர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதற்கட்ட தகவலின்படி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top