மீண்டும் சோகம்!! கடன் செயலியால் இளைஞர் தற்கொலை..!!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் ஆன்லைன் கடன் ஆப்புகளின் தொந்தரவால் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவற்றை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் சற்றும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னையில் மென்பொருள் நிறுவன ஊழியராக பணியாற்றி வருபவர் நரேந்திரன். இவருக்கு கடந்த சிலதினங்களுக்கு ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற நிலையில் மீண்டும் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடையாளம் தெரியாத மரம் நபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி மேலும், ரூ.50,000 கேட்டு தினமும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!!

இந்த சூழலில் நரேந்திரன் தாயாருக்கு போன் செய்து மரம் நபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது ஆன்லைன் ஆப் கடன் செயலி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.