இளைஞர் விரட்டி, விரட்டி வெட்டிக்கொலை… மதுரையில் கொடூரம்!

மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 25) என்பவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை வழக்கம் போல் வீட்டு வாசலில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த போது அவரின் நண்பரான ஆசிப் என்பவருடன் சுமார் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென அவரை வெட்டவே, அவர் அச்சத்தில் வீட்டுக்குள் சென்றுள்ளார். தொடர்ந்து அவரை வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பாக முயற்சித்தனர்.

இந்தநிலையில் அவர்களை பிடிக்க பிரகாஷின் சித்தி முயற்சி செய்துள்ளார் தொடர்ந்து அவரையும் வெட்டி தப்பபி ஓடியுள்ளனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ் எஸ் காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வெட்டு காயம் பட்ட பிரகாஷின் சித்தியை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து நண்பர்களுக்குள் என்ன பிரச்சனை வேறு ஏதேனும் முன் விரோத காரணமாக இருக்கலாமா என்பது குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment