தூக்குல போடாமல் ரயில்ல தள்ளி விட்டுங்க – விஜய் ஆண்டனி ஆவேசம்!!

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் சத்ய ப்ரியா. இவர் தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக தோழிகளுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ் என்ற இளைஞருடன் சத்தியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில் வாக்குவாதம் முற்றியதால் சந்தியாவின் கையைப்பிடித்து ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டார்.

அப்போது சம்பவ இடத்திலேயே சத்யா ப்ரியா உயிரிழந்தார். இத்தகைய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி ஆதங்கத்துடன் டுவிட் செய்துள்ளார்.

சின்னத்திரையில் பரபரப்பு!! நடிகர் அர்ணவ் அதிரடி கைது..!!!

அதன் படி, சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரிக்க கூடாது என்றும் குற்றவாளிக்கு 10 வருஷம் தண்டனை, தூக்கில் போட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு மாறாக தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.