Connect with us

மாஸ்க் போடலைன்னா 500 ரூபாய் அபராதம் போடுங்க!!-சென்னை மாநகராட்சி;

MASK wear

தமிழகம்

மாஸ்க் போடலைன்னா 500 ரூபாய் அபராதம் போடுங்க!!-சென்னை மாநகராட்சி;

கடந்த சில வாரங்களாக நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைய தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2500 கடந்து தினமும் பதிவாகி கொண்டு வருகிறது.

இதனால் மக்கள் மீண்டும் பல கட்டுப்பாடுகள் மத்தியில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாள்தோறும் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர மாநகராட்சி முககவசம் அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக மக்கள் கூடும் பகுதிகளில்  விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top