உங்க ஏரியால அப்பளம் தரம் குறைபாடா? இந்த நம்பருக்கு வாட்ஸ் அப்பில் சொல்லுங்கள்!: உணவு பாதுகாப்புத்துறை

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற தான் தற்போது தமிழகமெங்கும் காணப்படுகிறது. அவை அரசு பணிகள் தொடங்கி தற்போது உணவுப்பொருட்களை அனைத்திலும் ஊழல் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அடுத்தடுத்து கலப்பட உணவுகள், கெட்டுப்போன உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சில இடங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பலரும் விரும்பி உண்ணும் குடல் அப்பளம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை  உத்தரவிட்டுள்ளது. அதன்படி நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம் மற்றும் வத்தல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

குடல் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை வந்த புகார்கள் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் 2006, ஒழுங்குமுறைகள், 2011 ஆம் ஆண்டின் படி குடல் அப்பளம், வடகம், வத்தல் தரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

தரம் பற்றிய குறைபாடு குறித்து 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் unavupugar@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment