நீங்களெல்லாம் சிஎஸ்கே ரசிகர்களே கிடையாது!! ரசிகர்களை வெறுக்கும் ரசிகர்;

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்னதாக கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் விளையாடிய பெரும்பாலான ஆட்டத்தில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்து கொண்டு காணப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் பழைய கேப்டன் எம்எஸ் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அறிவித்த அடுத்த ஆட்டத்திலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே துவம்சம் செய்தது. இதனால் பிளே ஆஃப் போக அனைத்துப் போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வி அடையாமல் வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்டது.

அதற்கு அடுத்த போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி சுற்றுக்குள் நுழையாது என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் காணப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் சிஎஸ்கே வெறுக்கும் அளவிற்கு ஸ்டேட்டஸ்கள் வைத்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு ரசிகர் ஒருவர் தக்க பதிலடி கூறியுள்ளார்.

ஏனென்றால் நான் சிஎஸ்கே ரசிகன்தான் ஆயினும் சிஎஸ்கே ரசிகர்களை வெறுக்கிறேன் என்று கூறினார் தோல்வியடையும் போது இவ்வாறு இருப்பது ரசிகர்கள் அல்ல என்றும் அவர் கூறினார். மேலும் பல ஆடியன்ஸ் ரிவியூஸ் கீழே கொடுக்கப்பட்ட வீடியோவில் உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.