இந்தப் பாட்டுக்கும் அந்த வைரல் வீடியோவுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா? ஆண்டவர் செஞ்ச மேஜிக்!

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாகப் பரவியது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் முதன் முதலில் எம்.பிஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது முதல் உரையை தனது தாய்மொழியில் தொடங்கி மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசிய வீடியோ இணையதளத்தையே உலுக்கியது.

உலகமே உற்றுப் பார்த்த அந்த வீடியோவைத் தொடர்ந்து அந்த எம்.பி யார்? அவருடைய பூர்வீகம் என்ன? அவர் எந்த மொழியில் பேசினார் என்பதை ஆராயத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். கிட்டத்தட்ட 170 ஆண்டுகளுக்குப் பிறகு 21 வயதில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிர வைத்து உலகம் முழுவதும் வைரல் ஆன அந்த எம்.பி.யின் பெயர் மைபி-கிளார்க்.

மனிதர்கள் கடைசியாகக் குடியேறிய நாடு என்று சொல்லப்படும் நியூசிலாந்தின் மாவேரி  பழங்குடி இனத்தின் சொத்து தான் இந்த எம்.பி. சிறுவயதில் இருந்தே அடக்குமுறைகளைச் சந்தித்து வந்த பைபி-கிளார்க் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அதிகாரம் வேண்டும் அதற்கு அரசியல் தான் சரியான பாதை என்று உணர்ந்து அரசியல் களத்தில் நின்று வெற்றி பெற்று அந்த நாட்டின் மிகக் குறைந்த வயது எம்.பி. ஆனார்.

பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.

தனது முதல் நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் தன்னுடைய இனமான மாவேரி இனத்தின் பூர்வீக மொழியினை அவர்கள் நடனத்துடன் இணைந்து மைபி-கிளார்க் உரத்த குரலில் பேசியதை உலகமே கேட்டு வியந்து போற்றியது. அடக்கு முறைகளுக்கு எதிராக அவர் கண்களில் உணர்ச்சி பொங்கவும் தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தி பேசியதும் உலகை ஒருகனம் ஆடச் செய்து விட்டது.

இப்போது விஷயத்துக்கு வருவோம். இவர் பேசியதற்கும் நம்மூர் உலக நாயகனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. கடந்த 2002-ல் வெளியான பம்மல் கே சம்பந்தம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் சகலகலா வல்லவனே என்ற பாடலின் இடையில் கமல்ஹாசனும், சிம்ரனும் ஒரு பழங்குடி நடனத்தை ஆடுவார்கள். இப்போது புரிந்திருக்கும். அந்த நடனம் வேறு எதுவும் அல்ல. இப்போது டிரெண்டிங் ஆக வலம் வரும் மைபி-கிளார்க் உணர்ச்சி பொங்க பேசியபோது ஆடிய நடனம் தான் அது. மாவேரி பழங்குடிகளின் நடனத்தை 22 வருடங்களுக்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருப்பார் உலக நாயகன்.

சினிமாவில் கமல்ஹாசன் செய்யாத சாதனைகளே இல்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.