Connect with us

அண்ணன் படத்தில் மீண்டும் இணைந்த தம்பி… நடிகராக அல்ல ப்ளே பாயாக!

premvenkat201221 2

பொழுதுபோக்கு

அண்ணன் படத்தில் மீண்டும் இணைந்த தம்பி… நடிகராக அல்ல ப்ளே பாயாக!

அண்ணன் படத்தில் மீண்டும் இணைந்த தம்பி… நடிகராக அல்ல ப்ளே பாயாக!

சென்னை 600028, மங்காத்தா போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது சகோதரனான பிரேம்ஜிக்கு முக்கிய கதாபாத்திரத்தை வைத்திருப்பார்.

அதன்படி சென்னை 600028 படத்தில் பிரேம்ஜி நடித்திருந்தார் மற்றும் மங்காத்தா திரைப்படத்திலும் பிரேம்ஜி நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நடிகர் வெங்கட் பிரபுவிற்கு மீண்டும் தமிழ் சினிமாவில் நல்லதொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி நடித்திருந்தார்.

ஒரு விழா ஒன்றில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இதுபற்றி நகைச்சுவையான விமர்சனம் வைத்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக நடிகர் அசோக்செல்வனை வைத்து மன்மதலீலை என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை இசை பிளே பாய் பிரேம்ஜி இன்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் இதனை விமர்சித்தும் கருத்து கூறியும் வருகின்றனர். இது குறித்து நடிகர் பிரேம்ஜியின் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

isaiplayboy

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top