ஒரே மணமேடை!! இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்!!

மஹாராஷ்ட்ராவில் ஒரே நபரை இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்டது நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ரிங்கி மற்றும் பிங்கி பட்கோங்கர் என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவயது முதலில் இருந்தே ஒன்றாக இருந்து வந்தால் வரும் காலங்களில் பிரிந்து விடுவோமோ என்ற அச்சம் நிலவியது.

திருவள்ளூரில் பரபரப்பு! பேருந்து-லாரி மோதி விபத்து… 3 பேர் பலி!!

இதனால் நாங்கள் இருவரும் ஒரே நபரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பின்னர் தங்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவித்த நிலையில் முதலில் இத்தகைய முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து மகளின் விருப்பதிற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அதுல் உத்தம் ஆட என்பவருடன் இது குறித்து தெரிவித்துள்ளனர். அப்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே டந்த வெள்ளிக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.

கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு: ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் சென்ற மாணவர்கள்!!

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து நெட்டிசன்கள் மத்தியில் கடும் வாதங்களை முன்வைத்தது. அதன் ஒரு பகுதியாக மணமகள்களின் ஊரை சேர்ந்த ராகுல் பாரத் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.