Connect with us

போட்டோ ஷூட் எடுக்க வந்த இளைஞருக்கு கத்திக்குத்து!! மர்ம நபர்கள் தப்பியோட்டம்!!

223953 murder stabbing

தமிழகம்

போட்டோ ஷூட் எடுக்க வந்த இளைஞருக்கு கத்திக்குத்து!! மர்ம நபர்கள் தப்பியோட்டம்!!

நம் இளைஞர்கள் மத்தியில் செல்பி மோகம் என்பது அதிகமாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக போட்டோசூட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களை பக்கங்களில் வெளியிடுவது இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரிடமும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.

இதற்காக அவர்கள் விதவிதமான போஸ்கள் கொடுத்து போட்டோக்களை எடுப்பார்கள். இந்த நிலையில் போட்டோ சூட் எடுக்க வந்தவருக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மெரினாவில் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். இதில் நண்பர்கள் போட்டோ சூட் நடத்த சென்றுள்ளனர். அப்போதுதான் கத்தி சண்டை நடந்துள்ளது.

அதன்படி சென்னை மெரினாவில் நண்பர்கள் 6 பேருடன் போட்டோ சூட் எடுக்க வந்த இளைஞர் இளமாறன் என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு நண்பனின் திருமண விழாவை கொண்டாட ஏழு பேருடன் இளமாறன் வந்துள்ளார்.

கடற்கரைக்கு வந்த மூன்று மர்ம நபர்கள் இளமாறனிடம் செல்போனை கேட்டு மிரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மூன்று நபர்கள் குறித்து மெரினா போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top