Connect with us

தூத்துக்குடியில் பரபரப்பு: கடலில் மூழ்கி பழுதுபார்க்கும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்..

Capture 1

தமிழகம்

தூத்துக்குடியில் பரபரப்பு: கடலில் மூழ்கி பழுதுபார்க்கும் இளைஞர் மர்மமான முறையில் மரணம்..

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் கப்பலில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் டுவிரம் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவர் கடலில் சுமார் 300 அடி ஆழம் வரை சென்று பல்வேறு பணிகள் புரியும் டைலர் பயிற்சி முடித்துவிட்டு தற்போது எம். வி. ஸ்டார்க் என்ற கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காக சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 4 மீட்டர் அளவு மூழ்கி பழுது பார்த்து கொண்டிருந்தப்போது அவர் கடலில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் அவருடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் கொலை வழக்கு பதிவு செய்த கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த சாம்ராஜ்க்கு கடந்த 29-ம் தேதி கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் சூழலில் தற்போது மரணம் அடைந்திருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top