காரில் மோதிய பைக்; தட்டி கேட்ட டிரைவரை சாலையில் இழுத்துச் சென்ற இளைஞர்!

நம் நாட்டில் தினம் தோறும் விபத்து என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு நடக்கிறது.

அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஊர்களிலும் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு சிலர் தெரிந்தே விபத்தினை ஏற்படுத்தி தீய செயல்களில் ஈடுபடுவது அவ்வப்போது நடைபெறுகிறது.

இவை சினிமா பாணியில் இருந்தாலும் கூட உண்மை சம்பவம் ஆகவே காணப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு இன்றைய தினம் பெங்களூருவின் அருகே நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கார் ஓட்டுனரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரை மோதி விட்டு தப்ப முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தை பிடித்து நிறுத்த ஓட்டுனர் முத்தப்பா முயற்சி செய்துள்ளார்.

இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் கார் ஓட்டுநர் முத்தப்பாவை சாலையில் இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் சிலர் இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து முத்தப்பாவை மீட்டனர்.

முத்தப்பா இழுத்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.