பொதுவாக சாலை விபத்துக்கள் என்பது எப்போது நிகழும் என்றே கூற முடியாது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது சாலை ஓரங்களில் எச்சரிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் அதையும் தாண்டி ஒவ்வொரு சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால் வாகனங்கள் அந்த இடங்களில் வரும் போது வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு சில இளைஞர்கள் இந்த வேகத்தடையில் வேகமாக சென்று தங்களது இருசக்கர வாகனத்தை பறக்க விட முயற்சி செய்வார்கள். அவ்வாறு செய்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சென்னை மதுரவாயில் ஆலம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற தச்சு தொழிலாளி கண்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார். வேகத்தடையில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கண்ணனின் உடலை கைப்பற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.