சென்னையில் பரபரப்பு: பட்டப்பகலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதிலும், ஒருபுறம் வன்முறையானது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் சென்னை பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞரை  அரிவாளால்வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment