அந்த மனசுதான் சார் கடவுள்.. பள்ளி உள்கட்டமைப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய இளநீர் விற்கும் பெண்!
திருப்பூர் மாவட்டத்தில் இளநீர் விற்கும் பெண் ஒருவர் அரசுப்பள்ளியின் கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி இருக்கும் செயல் குறித்து பிரதமர் மோடி பாராட்டியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் தாயம்மாள் என்ற பெண் வழித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அவர்கள் இருவரும் சீன்னவீரம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தாயம்மாள் இளநீர் வாங்கி அதனைக் கடை போட்டு பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் தன் மகள் மற்றும் மகன் படிக்கும் சீன்னவீரம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அந்தக் கூட்டத்தில் தாயம்மாள் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் பள்ளிப் படிப்பின் தரத்தினை மேம்படுத்துவது குறித்தும் பள்ளியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது உள்கட்டமைப்பை மேம்படுத்த தாயம்மாள் பள்ளி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
தான் இத்தனை ஆண்டுகளாக இளநீர் விற்று மகன் மற்றும் மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து தாயம்மாள் நெகிழ்ச்சியினை ஏற்படுத்திவிட்டார். இதுகுறித்து மன் கி பாத் உரையில் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
