Connect with us

டோனியை விட முன்னேறிய இளம் இந்திய விக்கெட் கீப்பர்!

Sports

டோனியை விட முன்னேறிய இளம் இந்திய விக்கெட் கீப்பர்!

fe3b18f0da090a027d28d69999e12331

தற்போது மக்கள் மத்தியில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் போட்டியானது இந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த ஐபிஎல் திருவிழாவான கிரிக்கெட் போட்டி சில தினங்களுக்கு முன்பாக இந்த ஆண்டு நடைபெறாது என்று ரத்து செய்யப்பட்டது. காரணம் என்னவெனில் இந்திய நாட்டில் முழுவதும் கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த ஐபிஎல் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டது.8e3dac1001047a191ce013d28150cb3e

மேலும் ஐபிஎல்  போட்டியில் உள்ள 8 அணிகளும் தங்களது ரசிகர்களுக்கு வலைதளத்தின் மூலம் மகிழ்ச்சி அளித்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது இளம் வீரர்கள் கொண்ட டெல்லி கேப்பிடல் அணியின் ட்விட்டர் பக்கம்  தினந்தோறும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இதனால் அவர் டெல்லி அணியின் ரசிகர்கள் ஓரளவு சந்தோஷத்தில் உள்ளனர்.இந்நிலையில் தற்போது டெல்லி அணியின் ட்விட்டர் பக்கம் ஆனது சில மகிழ்ச்சியான தகவலை அளித்து உள்ளது. 

அதன்படி டெல்லி அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட் ஐசிசி பேட்டிங் வரிசையில் முன்னேறியதாக கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பிடிக்காத இடத்தை பிடித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ரிஷப் பந்த் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இதுவரை ஐசிசி டெஸ்ட் பேட்டிங் வரிசையில் எந்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர் முதல் 10 இடத்தை பிடிக்கவில்லை குறிப்பிடத்தக்கது .மேலும் இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த கேப்டன் தோனியை விட முன்னேறி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top