ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்: RAPIDO ஓட்டுனர் கைது!!

ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் கோவையில் கடந்த சில நாட்களாக தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரூப்பூர் சென்ற அந்த பெண் இரவில் கோவை திரும்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நள்ளிரவு 12 மணியளவில் பிளமேடு பகுதியில் இறங்கிய அவர் வீட்டிற்கு செல்ல RAPIDO ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டதாக தெரிகிறது. இருப்பினும் ஆட்டோ நிற்காமல் சென்றதால் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதில் அவருடைய தலை. கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு அழைத்த அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு பிளமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாக தெரிகிறது.

அதன் பேரில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது சாதிக் என தெரியவந்துள்ளது. தற்போது அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment