உலக நாயகன் கமல்ஹாசனின் மகனாக நடிக்கும் வாய்ப்பு இளம் நடிகர் ஒருவர் பெற்றுள்ளதை எடுத்து அவர் உற்சாகத்தில் மிதந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் மகள் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும் அந்த கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராமன் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற காளிதாஸ் ஜெயராம் உற்சாகத்த்தில் மிதந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் அவர்களின் மகனாக நடிப்பதில் தனக்கு மிகப்பெரிய பெருமை என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஜெயராம் நடித்து உள்ளதை அடுத்து தற்போது அவருடைய மகன் கமலஹாசனுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது