190 ரன்கள் எடுத்து 2புள்ளி வாங்கிக்கோங்க..!!! கெத்தாக விளையாடிய பஞ்சாப்;

இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் ஐபிஎல் போட்டிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும். அந்தப்படி இன்று மாலை 03:30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் bairstow மட்டும் அரை சதம் விளாசி அணியை வழிநடத்திச் சென்றார். இருப்பினும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் நட்சத்திர பந்துவீச்சாளர் chahal சுழற்பந்துக்கு  எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

அதன்பின்னர் பஞ்சாப் அணி தட்டுத்தடுமாறி 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்போடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டுவருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேட்டிங் தரவரிசையில் தாறுமாறாக உள்ளதால் சேசிங் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3-வது இடத்திலும் பஞ்சாப் அணி 7-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.