வெற்றி! வெற்றி!! டீம் ஒர்க் என்றால் அத ராஜஸ்தான் ராயல்ஸ்ட்ட தான் கத்துக்கணும்;

இன்றைய தினம் மாலை 03:30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்  Bairstow அரை சதம் விளாசி அணியை வழிநடத்தினார்.

அதன் பின்னர் வரிசையாக விழுந்து 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுத்து இருந்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்போடு களமிறங்கியது.

களமிறங்கிய முதல் கொண்டு நிதானமாக ஆடி ஒரு குழுவாக போட்டியில் பங்கேற்று உள்ளதுபோல் காணப்பட்டது. ஏனென்றால் பேட்டிங் செய்த ஒவ்வொரு வீரரும் தங்களது பங்கிற்கு ரன்கள் எடுத்து தங்களை நிரூபித்து உள்ளனர்.

இதனால் ஒரு அணியாக விளையாண்டு 190 ரன்களை கடந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெறும் இரண்டு பந்துகள் மீதமுள்ள போது 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.