நீயே இப்படி என்னை பேசிட்டியே: பாலாவிடம் வருத்தப்பட்ட ஷிவானி!

376de8d0f5c975f44f5050e3ad5cd0ed

பிக்பாஸ் வீட்டிற்கு கிட்டத்தட்ட கடைசி விருந்தாளியாக வந்திருந்த ஷிவானி முதல் புரமோவில் பாலாஜியை கண்டுகொள்ளவே இல்லை என்பதும், இரண்டாவது புரமோவில் அவர்  பாலாஜியிடம் பேசினாலும் பட்டும் படாமல் தான் பேசினார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது புரமோவில் பாலாஜியை ஏன் அவர் தவிர்த்தார் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ‘நீயே என்னை பற்றி இப்படி பேசினால் என்ன அர்த்தம்? என்று ஷிவானி கேட்ட கேள்விக்கு பாலாஜி அதிர்ச்சி அடைந்து, ‘நான் என்ன அப்படி பேசினேன்? என்று கூறுகிறார் 

01a6da365cb8f8471f851b92607d1b8e

அதற்கு ஷிவானி, ‘நீயாவது பரவாயில்லை உனக்கு ஒரு விஷயம் சொன்னால் புரியும், ஆனால் அவளுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னால் புரிவதற்கு டைம் எடுக்கும் என்று நீ எப்படி கூறலாம்? என சிவானி கேட்க ’நான் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று பாலாஜி கூறினாலும் நீ அப்படி பேசியிருக்க கூடாது, நீ என்னை பற்றி அப்படி பேசி இருக்கிறாய் என்று வருத்தத்துடன் ஷிவானி கூறுகிறார் 

சரி நான் பேசியதும் தப்புதான் மன்னித்துக் கொள் என்று பாலாஜி கூறுகிறார். அதன்பிறகு நீ செய்ததில் எந்த தவறும் இல்லை, நான் அவள் முன்னாடியே சொல்வேன் நீ செய்தது 100% சரிதான் என்று பாலாஜிக்கு கடைசியாக வந்த சுரேஷ் ஆறுதல் கூறுகிறார். இந்த காட்சிகளுடன் இன்றைய புரோமோ விடியோ முடிவடைகிறது 

ஆனால் இந்த புரோமாவை வைத்து அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை சரியாக கணிக்க முடியாத அளவில் இருப்பதால் இன்றைய முழு நிகழ்ச்சியையும் பார்த்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.