
தமிழகம்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது நீங்கள்! குறைப்பது நாங்களா? – மா. சுப்பிரமணியன்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறித்து மத்திய அரசின் மீதான எல்லா மாநிலங்களின் விமர்சனங்களையும் தெரிந்துகொள்ளுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மருத்துவ சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது நீங்கள் குறைப்பது நாங்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மா. சுப்ரமணியன் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதாக தெரிவித்தார். இதனால் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என கூறனர்.
இந்த சூழலில் மத்திய அரசின் மீதான எல்லா மாநிலங்களின் விமர்சனங்களையும் தெரிந்துகொள்ளுமாறு அண்ணாமலைக்கு மருத்துவ சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
