Connect with us

பீஸ்ட் படத்தின் கதை தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்…!

பீஸ்ட்

பொழுதுபோக்கு

பீஸ்ட் படத்தின் கதை தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்…!

பீஸ்ட் படத்தின் கதை தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்…!

கோலிவுட் முழுவதும் டிரெண்டிங்கில் உள்ள படம் என்றால் அது அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் தான். இதில் அஜித் படம் முழுவதும் முடிவடைந்து வெளியாகும் நேரத்தில் வெளியீடு தள்ளி சென்று விட்டது. அனேகமாக படம் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன.

ஆனால் விஜய்யின் பீஸ்ட் படம் அப்படி அல்ல இதுவரை படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. விஜய் ரசிகர்களும் அவ்வபோது படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறார்கள். ஆனால் படக்குழுவினர் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

மேலும் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றதால் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது இருப்பினும் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி பீஸ்ட் படத்தின் கதை ஒரே ஒரு நாளில் நடக்கும் கதையாம். படம் முழுவதும் விஜய் ஒரே ஒரு காஷ்ட்யூமில் தான் வலம் வருவார் என கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருப்பினும் படம் குறித்த இந்த செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில் இதாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top