‘உங்களால ஒரு செங்கல்லைக் கூட உருவ முடியாது’ – பாஜகவுக்கு சவால் விட்ட திருமா!

திமுக கூட்டணி கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டுக்கோப்பாக உள்ளதால் ஒரு செங்கலை கூட பாஜகவால் உருவ முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவன் உறுதி

கிருஷ்ணகிரி மாவட்ட வீர தியாகி திப்பு சுல்தான் மாநில பேரவை சார்பில் 273 வது திப்பு சுல்தான் ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “திமுக முன்னாள் தலைவர் கலைஞர் இல்லாததால் திமுக சிதறி போயிடும் என கணக்கு போட்டார்கள், ஆனால் திமுகவை தனது தலைமையின் கீழ் கட்டுக்கோப்பாக ஸ்டாலின் வழி நடத்துகிறார். கலைஞர் இல்லாததால் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஸ்டாலின் பின்னால் செல்லாது. அவர் சரியாக பேசமாட்டார், முகம் சுளிப்பார் என்றெல்லாம் பேசினார்கள், ஆனால் இந்தியாவில் காங்கிரஸும், இடதுசாரிகளும், இடம்பெறும் கூடிய ஒரு அணியை கட்டிய பெருமை ஸ்டாலினை சாரும், இதனால் தான் ஆர் எஸ் எஸ் க்கு கொலை நடுங்க செய்கிறது.

மூன்று தேர்தலில் மகத்தான மாபெரும் வெற்றியை இந்த கூட்டணி பெற்றுள்ளது. ஆனால் அந்த அணி இருக்கா, இல்லையா, என தெரியவில்லை, அதிமுக இரண்டு உடைந்து உள்ளது. பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. தேமுதிக அமைதியாக உள்ளது. இருக்கா, இல்லையா, என்று தெரியவில்லை, அப்போ அந்த கூட்டணியில் யார் உள்ளனர், என தெரியவில்லை.

ஆனால் 2019 ஆண்டு முதல் திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. ஒரு செங்கலை கூட பாஜக, ஆர். எஸ்.எஸ். உருவ முடியாது. கூட்டணியை சிதறடிக்க பார்த்தார்கள் ஆனால் கூட்டணி காப்பாற்றுவதில் விடுதலை சிறுத்தைகள் பங்கு மகத்தானது என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் 2000 ஏழை எளிய நபர்கள் பெண்களுக்கு தையல் இயந்திரம் சமையல் குக்கர் புடவை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.