Connect with us

இனிமே தமிழில் பாஸ் செய்தால் தான் போலீசாக முடியும்!: தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு;

காவல்துறை

Tamil Nadu

இனிமே தமிழில் பாஸ் செய்தால் தான் போலீசாக முடியும்!: தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு;

இனிமே தமிழில் பாஸ் செய்தால் தான் போலீசாக முடியும்!: தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு;

பொதுவாக படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் வருவது தான். இதற்காக மாணவர்கள் பலரும் படிக்கும்போதே பயிற்சி மேற்கொள்வார்கள். அதேவேளையில் படித்து முடித்துவர்களும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து காவலர் தேர்வுக்கு மும்மரமாக பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் காவலர் தேர்வு உடற்கூறு மற்றும் எழுத்து தேர்வு ஆகிய இரண்டும் நடைபெறும். தற்போது தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காவலராக முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காவலராக முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் கூறியுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மாற்றம் கொண்டு வந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காவலர் எழுத்துத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு மற்றும் காவலர் எழுத்துத்தேர்வு தலா 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட உள்ளது.

தமிழ் தகுதி தேர்வு நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும். இதனால் கடந்த சில நாட்களாக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top