Connect with us

சுய மரியாதையை இழந்தால்தான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும்: டி.ஆர்.பாலு காட்டம்..

22 tr baalu2 600 1553570140

தமிழகம்

சுய மரியாதையை இழந்தால்தான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும்: டி.ஆர்.பாலு காட்டம்..

சுய மரியாதையை இழந்தால்தான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும்: டி.ஆர்.பாலு காட்டம்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகின்ற 19- ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தகைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால்  தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

அப்போது பேசிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் எல்லாம் என்னை திட்டுவதாக தெரிவித்தார். பின்னர் கல்லால அடிக்காத வரைக்கும், காயம் படாத வரைக்கும் சந்தோஷப்படுங்கள் என தெரிவித்தார்.

இதனிடையே மாவட்ட செயலாளராக நான் இருக்கையில் எத்தனை அடி பட்டிருப்பேன், எவ்வளவு உதை பட்டிருப்பேன் என கூறினார்.

மேலும், மானம், ஈனம், சுய மரியாதை எல்லாம் இழந்துட்டு வந்தாதான் கட்சியில் நிர்வாகியா இருக்க முடியும் என்றும் இவைகள் எல்லாம் தனக்கு பழகிப்போனதாகவும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top