பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்குச் செல்லலாம்.. குட் நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி
கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்து விறுவிறுவெனப் பரவி வருகின்றது.
கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாவது அலை என நாம் ஒவ்வொரு அலையோடும் பயணித்துவிட்டோம்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் அரசு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி மாஸ்க் அணிதல், பொது வெளியில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கொரோனாத் தடுப்பூசி செலுத்துதல் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக வார இறுதியில் முழு ஊரடங்கு வார நாட்களில் இரவு ஊரடங்கு எனப் பலவும் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் கொரோனாத் தொற்று பரவுதல் குறைந்து வருவதால் தளர்வுகள் பலவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ல கடற்கரை பிப்ரவரி 1 ஆம் தேதி செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடற்கரைக்குச் செல்வோர் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றுதல் சிறப்பானதாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மீண்டும் கடற்கரை திறக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
