உலகிற்கே மிக அச்சத்தை தரும் ஒரு வைரஸ் கிருமி ஆக ஒமைக்ரான் மாறியுள்ளது. ஒமைக்ரான் முதலில் தென்பட்டது. தற்போது உலகில் உள்ள பல நாடுகளிலும் இந்த ஒமைக்ரான் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது.
குறிப்பாக நம் இந்தியாவிலும் 30க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் நோயின் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு மணி நேரத்தில் ஒமைக்ரான் நோய் பாதிப்பை கண்டறியும் கருவியை ஐசிஎம்ஆர் கண்டுபிடித்துள்ளது.
அதன்படி அசாம் மாநிலத்தில் திப்ரூகரில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் அளித்துள்ளது. தற்போது மரபணு பகுப்பாய்வு மூலமே ஒமைக்ரான் வைரஸ் உள்ளதா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய நான்கு நாட்கள் கூட ஆகிவிடுகிறது. உலகம் முழுவதும் இன்று ஒமைக்ரான் பெருகிவரும் நிலையில் ஐசிஎம்ஆர்-ன் புதிய கருவி பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஜிசிசி பயோடெக் என்ற நிறுவனம் மூலம் புதிய பரிசோதனைக் கருவியை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.