இனி கவலை எதுக்கு நண்பா! ஒரே சார்ஜரில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யலாம்! அதுவும் 35 வாட் சார்ஜரில்!!
தற்போது அனைவர் கைகளிலும் மொபைல் போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்டு போனின் மோகம் அதிகரித்துள்ளது. என்ன தான் ஆண்ட்ராய்டு போன்கள் வரத்து அதிகரித்து இருந்தாலும் அதால் ஐபோனை முறியடிக்க முடியவில்லை என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.
ஏனென்றால் ஐபோனின் தரமும் விலையும் தாறுமாறாக இருக்கும். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய வடிவமைப்பில் ஒன்றினை தயாரித்து கொண்டு வருகிறது. அதன்படி ஒரே சமயத்தில் இரண்டு போன்களை சார்ஜ் செய்யக்கூடிய நவீன சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல சீன நிறுவனங்கள் செல்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய 80 வாட் வரை திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்போன் சேவையில் பல புதுமையை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் 20 வாட் திறன் கொண்ட சார்ஜரை மட்டுமே வழங்கி கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் 35வது வாட் சீட்டைப் சார்ஜர் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதல்முறையாக 35 வாட் திறன் கொண்ட சீ-டைப் சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த வருவதாக இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
சந்தையில் 35 சீட்டைப் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டால் வாடிக்கையாளர்களால் ஐபோன்களை வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 35 வாட் சீ-டைப் சார்ச்சரால் ஒரு ஐபோன், ஒரு ஆப்பிள் வாட்ச் அல்லது இரண்டு ஐபோன்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
