
செய்திகள்
குரூப்-4ஐ தாண்டிய நீட் தேர்வு விண்ணப்பம்!! 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு;
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்ப்பது எதுவென்றால் நீட் தேர்வுக்கு தான். ஏனென்றால் நீட் தேர்வின் காரணமாக நம் தமிழகத்தில் வருடா வருடம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.
ஏழை எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவது மிகவும் கடினமாக காணப்படுகிறது. இதனால் அவர்களின் மருத்துவ கனவு நிறைவேற முடியாது என்ற அச்சத்தில் பலரும் விபரீத முடிவுகள் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் கூட நீட்தேர்வு என்னமோ நடக்க தான் உள்ளது.
அதன்படி ஜூலை 17-ஆம் தேதி இந்தியாவில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்விற்கு மே 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
