வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலையே வேண்டாம்; ஆதார் அட்டை இருந்தால் போதும் நீங்களும் வாக்களிக்கலாம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்களிப்பது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வாக்களிக்க 11 ஆவணங்களில் ஒன்று அவசியம் என்று கூறியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதார், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது பதினோரு ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளது. தொழிலாளர் நல அமைச்சகம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு கூட காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment