ஹிட் பட இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைத்த யோகி பாபு…..!

தமிழ் சினிமாவில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி என்ற ஒற்றை படம் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி

குறிப்பாக படத்தில் 90’ஸ் கிட்ஸ்களை கவரும் விதமாக பல காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்தனர். அதிலும் படத்தில் யோகி பாபுவின் காமெடி பலராலும் ரசிக்கும் விதமாக இருந்தது. இப்படத்தின் வெற்றியால் பிரதீப்பின் அடுத்த படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் தான் பிரதீப் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் போன்ற தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இந்த புதிய படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கோமாளி படத்தில் யோகி பாபு நடித்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் பிரதீப் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.

 யோகி பாபு

தற்போது தமிழ் சினிமாவில் யோகி பாபு தான் ஒன் மேன் ஆர்மி போல சோலோ காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது. அந்த வகையில் இந்த படத்திலும் அவரின் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment