Entertainment
யோகிபாபு- சுனைனா நடிக்கும் புதிய படம்
யோகிபாபு கடந்த சில வருடங்களாக இவர் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்று சொல்லுமளவுக்கு அனைத்து படங்களிலும் ஹீரோவுக்கு இணையாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவுக்கு தோஸ்தாக ஒரு காலத்தில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி நடித்து வந்தார்கள்.

இப்போதும் அதே முன்னணி நடிகர்கள் ஹீரொவாக நடித்து வருகிறார்கள். ஆனால் ஹீரோவின் தோஸ்த் மட்டும் மாறி இருக்கிறார் அவர்தான் யோகிபாபு.
சில படங்களில் முழு ஹீரோவாக நடிக்காவிட்டாலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட அவர் நடித்த தர்மப்பிரபு படம் வெளியானது. இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படமாக ட்ரிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் யோகிபாபுவுடன் சுனைனா நடித்துள்ளார்.
டார்லிங் கூர்க்கா படங்களை இயக்கிய சாம் ஆண்டனிடம் உதவியாளராக இருந்த டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
