தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு , முதலில் சிறுசிறு வேடங்களில் வந்த யோகி பாபு மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து பிசியாக மாறினார், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்ததில் இருந்து பிரபலமடைய ஆரமித்துள்ளார்.
இவர் தற்போழுது இந்தியில் அட்லி இயக்கம் ஷாருக்கான் படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார், மேலும் தலைவர் ரஜினி 169 படத்தில் நடிக்க ஒப்பந்தப்பமாகியுள்ளார், சுந்தர் . சி யின் காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் ஹீரோவாக யோகிபாபு நடிப்பு மக்கள் மனதில் பதியும் படி அமைந்துள்ளது. இந்த படத்தின் கதைக்களம் , நடிப்பு உலகளவில் யோகிபாபு நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்தது.
அதை தொடர்ந்து அடுத்ததாக நீலம் புரொடெக்சன்ஸ் பா ரஞ்சித் யோகிபாபுவை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறார்.படத்தின் பெயர் பொம்மை நாயகி.படத்தின் கதைக்களம் சமூகத்தில் தற்போழுது பெரும் பிரச்சனையாக நிலவும் சிறுமிகள் பாலியல் வன்முறையை தொடைபுடைய கதையாகும்.
நடிகர் யோகிபாபு இந்த படத்தில் மிகக் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது, காமெடி நடிகராக இருக்கும் இவர் இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து தன் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி திரை துறையில் வெற்றியை பெற முடிவிடுத்துள்ளார் .
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பா.ரஞ்சித் பகிர்ந்துள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னைக்கு என்ட்ரி கொடுத்த அஜித்! லேட்டஸ்ட் புகைப்படம்!
இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படமும் மண்டேலா படத்தை போல சமூக கருத்து கொண்ட படமாக இருப்பதால் யோகிபாபுவிற்கு மீண்டும் வெற்றிஉறுதிதான் என நம்பப்படுகிறது.